அவுஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்ஸ்டுவர்ட் மக்கில் பாரிய போதைப்பொருள் விநியோக சதிமுயற்சியுடன் தொடர்புபட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின்கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்காக 44 டெஸ்ட்களில் விளையாடிய மக்கில் (52) செவ்வாய்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
2021 இல் மக்கில் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னர்முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் போதைப்பொருள் விநியோக சதிதிட்டத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் தனக்கு எதிரான இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.
தடைசெய்யப்பட்ட போதைப்பொருளை மிகப்பெருமளவில் விநியோகிப்பதற்கான முயற்சிகளில் மக்கில் ஈடுபட்டார் என காவல்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
மூன்று இலட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான போதைப்பொருளை விநியோகிப்பதற்கான சதிமுயற்சியில் அவர் ஈடுபட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.