தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பில் 6 பேருக்கு எதிராக இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கொழும்பு மேல்நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ரவிராஜ், 2006ஆம்; ஆண்டு நவம்பர் 10ஆம் திகதியன்று முற்பகல் வேளையில், கொழும்பில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதுதொடர்பில் 6 பேர் மீது இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டபோதிலும், மூன்று பேர் இதுவரையிலும் கைதுசெய்யப்படவில்லை.
கைது செய்யப்படாத அவர்கள் மூவரும் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்துசென்ற குழுவின் உறுப்பினர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர் கடற்படை தரப்பினர் என்பதுடன், மற்றையவர் காவல்துறையைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த 6 பேருக்கு எதிராக கொலை. கொலைக்கு உடந்தையாக இருந்தமை மற்றும் கொலைக்கு திட்டமிட்டமை போன்ற குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்படைவீரர்கள் இருவர் மற்றும் காவல்துறை அலுவலர் ஆகியோரின் விளக்கமறியலை விசாரணை முடியும் வரை நீதிபதி நீடிப்பு செய்தார்.