அமெரிக்க அதிபரின் வசிப்பிடமான வெள்ளை மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபரின் வசிப்பிடமான வெள்ளை மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். குறிப்பாக முஸ்லிம் நாடுகளில் இருந்து வருவோர்க்கு தடை விதித்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், அமெரிக்க பாதுகாப்பு துறையையும் இதுவரை இல்லாத அளவுக்கு பலப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், இன்று அதிபரின் வசிப்பிடமான வெள்ளை மாளிகையில் உள்ள கார் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாகவும், இன்னும் சில நேரங்களில் வெடிக்கும் எனவும் வெள்ளை மாளிகையில் கார் டிரைவராக பணியாற்றும் ஊழியருக்கு மிரட்டல் வந்துள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. அங்கு சோதனை மேற்கொண்ட போலீசார் அப்படி வெடிகுண்டு எதுவும் இல்லை எனத் தெரிவித்தனர்.
இருப்பினும் வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மிரட்டல் விடுத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கடந்த வாரம் இதேபோல் மர்மநபர் ஒருவர் வெள்ளை மாளிகையின் சுற்றுச் சுவரை ஏறிக் குதித்து உள்ளே சென்று போலீசாரிடம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.