யானைக்கால் நோயை முற்றாக ஒழித்த நாடாக இலங்கை இன்று பதிவு பெற்றது.
உலக சுகாதார சம்மேளனத்தினால் இதற்கான சான்றிதழ் இன்று, சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
இதன்படி, தெற்காசிய நாடுகளில் யானைக்கால் நோயை முற்றாக ஒழித்த நாடுகளில் இரண்டாம் இடத்தை இலங்கை பெற்றுள்ளது.
ஏற்கனவே மாலைதீவு இந்த சான்றிதழை பெற்ற முதலாவது தெற்காசிய நாடு என்ற பெருமையை கொண்டுள்ளது.