ரயில் இயந்திர இயக்குநர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக 36 க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இரத்தாகியுள்ளன அத்துடன் பல ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளன.
இந்நிலையில், ரயில் பயணிகள் பலர் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இதையடுத்து, ரயில்களின் பெட்டிகளுக்கு மேல் பலர் பாதுகாப்பின்றி பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலின் மேல் ஏறிப்பயணித்த இளைஞன் ஒருவர் ஹொரபே பகுதியில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.