சிங்கள மக்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தி புதிய அரசியலமைப்பை நிறைவேற்றி கொள்ள முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தேசத்தை பாதுகாக்கும் தேசிய இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
அந்த இயக்கத்தின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சிங்கள மக்களுக்கிடையே முறுகலை தோற்றுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
குருநாகல், பதுளை, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளுக்கு சென்று இயன்றளவு சிங்கள மக்களிடையே நிலவும் பேதங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
இதனையடுத்து அரசியலமைப்பையோ அல்லது மக்கள் கருத்துக்கணிப்பையோ நடத்துவதற்கான ரகசிய கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தேசத்தை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.