அனுமதியை மீறி கட்டிடங்களை நிர்மாணித்தால் அபராதம் – எச்சரிக்கிறார் அமைச்சர் பைசர் முஸ்தபா

317 0

faizer_musthafa_004அனுமதிக்கப்பட்ட வரைபடத்தில் உள்ளதை விட அதிகமான மாடிகளை கொண்ட கட்டிடங்களை நிர்மாணித்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையை உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா விடுத்துள்ளார்.

சிலர் இரண்டு மாடி கட்டிடத்திற்கான அனுமதி பெறுகிறார்கள்.

ஆனால் ஐந்து மாடிகளை கொண்ட கட்டிடம் நிர்மாணிக்கப்படுகிறது.

இதனுடாக உள்ளுராட்சி மன்றங்களது வருமானம் இழக்கப்படுகின்றது.

எனவே எதிர்காலத்தில் இதற்காக அபராதம் விதிக்கவுள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.