சிவில் உடையணிந்த காவற்துறை அதிகாரிகளை போக்குவரத்து கடமைகளில் ஈடுபடுத்துவதற்கான அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதற்காக காவற்துறை இலட்சினையுடன் கூடிய மோட்டார் வாகனம் ஒன்றை பயன்படுத்துவதற்கும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
வீதி சட்டங்களை பாதுகாப்பதன் ஊடாக வாகன விபத்துக்களை குறைத்தல், பாதசாரிகைள பாதுகாத்தல் மற்றும் வாகன நெரிசலை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஒத்திகை நடவடிக்கையும் அண்மையில் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.