வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்பங்குவ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வெட்டுக் காயங்களுடன் ஒருவரின் சடலம் நேற்று (09) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் தனது தாய் மற்றும் மூத்த சகோதரர்களுடன் வீட்டில் வசித்து வந்ததாகவும், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மரணம் தொடர்பில் வெல்லவாய பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வெல்லவாய கங்பங்குவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.