உள்ளுராட்சி நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள உள்ளுராட்சி நிறுவனங்களில் தற்போது சுமார் 8 ஆயிரம் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள் கடமையாற்றுவதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
குறித்த ஊழியர்களை நிரந்தரமாக்குவது தொடர்பான யோசனையை பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.