பேருந்திற்காக காத்திருந்த ஆசிரியையின் தங்கச் சங்கிலி அறுப்பு

85 0

யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் ஆசிரியை ஒருவரின் தங்கிச்சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்று(09.09.2023)இடம்பெற்றுள்ளது.

ஆசிரியை பேருந்திற்காக காத்திருந்த வேளை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் ஆசிரியையின் சங்கிலி அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்ட போது உடனடியாக அவ்விடம் சென்ற மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.