எல்.இ.டி. விளக்குகளுடன் கூடிய ஆடை அணிந்து வந்த மணப்பெண்

87 0

திருமணத்தின் போது மணப்பெண்ணின் ஆடைகள் மற்றும் அலங்காரம் மிகவும் அழகாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார்கள். அந்த வகையில் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு இளம்பெண் திருமணத்தின் போது அணிந்து வந்த ஆடை இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது ரேகா டேனியல் என்ற மணப்பெண் திருமண மண்டபத்திற்குள் நுழையும் போது அவரது ஆடைகளை வித்தியாசமாக காட்டுவதற்காக அதில் எல்.இ.டி. லைட்டுகளை பொருத்தி உள்ளார். இது விழாவுக்கு வந்திருந்தவர்களை வித்தியாசமாக கவனிக்க செய்ததோடு சமூகவலைதளங்களில் வைரலாகி 3.27 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களின் பார்வைகளையும் கவர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது.

விழாவுக்கு வரும் அனைவரது கவனமும் தன்மேல் விழ வேண்டும் என்பதற்காக இதுபோன்ற வித்தியாசமான ஆடை அணிந்ததாக ரேகா குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த ஆடையை தனது கணவர் தான் வடிவமைத்ததாகவும், அதனால் ஆடையை பெருமையுடன் அணிந்ததாகவும் அவர் கூறினார். இதனை பலரும் பாராட்டி வருகிறார்கள்.