பண்டாரவளை – அப்புத்தளை வீதியில் பார ஊர்தி விபத்துக்குள்ளாகியதில் சாரதி உட்பட இருவர் காயம்

75 0

பண்டாரவளை – ஹப்புத்தளை வீதியில் பார ஊர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து பண்டாரவளை பகுதிக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற பார ஊர்தியொன்றே நேற்று (06) மாலை இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பண்டாரவளை – ஹப்புத்தளை வீதியில் ஒத்த கடை புகையிரத கடவைக்கு அருகாமையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பார ஊர்தியில் வேகத்தடுப்பு இயங்காத காரணத்தால் வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் பார ஊர்தியின் சாரதியான 44 வயதுடைய நபர் படுகாயமடைந்த நிலையில் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை சாரதியின் உதவியாளர் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.