புதிய அரசியல் அமைப்புக்கு எதிராக பிரசாரம் செய்கின்றவர்கள் கடந்த வருடம் புதிய அரசியல் அமைப்பு தொடர்பான தீர்மானம் நிறைவேற்றபட்ட போது எங்கு இருந்தார்கள் என கேள்வி எழுப்புவதற்கு எந்த ஊடகமும் முன்வரவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம் ஏ சுமந்திரன் இதனை தெரிவித்தார்.
கடந்த வருடம் மார்ச் மாதம் புதிய அரசியல் அமைப்பு தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மக்கள் கருத்து கணிப்புக்கு விடப்படும் என குறிப்பிடப்பட்டிருந்த போதும் அதற்கு எவரும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை எனவும் சுமந்திரன் இதன்போது குறிப்பிட்டார்.
குரல் சுமந்திரன்