இசைக் கச்சேரிகளில் இனி இளையராஜா பாடல்களை பாட இயலாது என்று பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூறியுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இளையராஜா சார்பில் அவரது வழக்கறிஞர், எனக்கும், என்னுடைய மகன் சரண், பாடகி சித்திரா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதாவது இளையராஜா இசையமைத்த பாடல்களை அவருடைய அனுமதி இல்லாமல் இனி பாடக் கூடாது. மீறி பாடினால் அபராதத்தொகையை சட்டப்படி கொடுக்க வேண்டியிருக்கும் என்று அதில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் எனக்கு இந்த சட்டத் திட்டஙகள் மீது சரியான புரிதல் இல்லை.
இது தான் சட்டம் என்றால் நான் அதை ஏற்றுக்கொள்கிறேன்.எனவே இந்த சூழலில், இனிமேல் நானும், எங்கள் குழுவினரும் இன்றிலிருந்து இளையராஜாவின் பாடல்களை இசைக்கச்சேரியில் பாட மாட்டோம். ஆனால் கச்சேரி நடக்க வேண்டும். கடவுளின் அருளால் இளையராஜா தவிர, மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை நான் பாடியுள்ளேன்.அந்த பாடல்களை இனிவரும் இசைக்கச்சேரிகளில் நான் பாடுவேன். இனிவரும் இசைக் கச்சேரிகளுக்கும் உங்களின் ஆசீர்வாதம் இருக்க வேண்டும். உங்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.இவ்வாறு பாடகர் SPP கூறியுள்ளார்.