அமெரிக்க – இந்தியா – இங்கிலாந்து தூதரகங்கள்/அலுவலகங்களை முற்றுகை- 20-3-2017

405 0

ஐ.நா அவையில் தொடர்ச்சியாக இனப்படுகொலை இலங்கைக்கு ஆதரவாக வெற்று தீர்மானங்களை கொண்டு வரும் அமெரிக்கா இந்தியா இங்கிலாந்து தூதரகங்கள் மற்றும் அலுவலகங்களை முற்றுகை.

தமிழர்களே! இலங்கையை காப்பாற்ற தொடர்ந்து ஐநா அவையில் வெற்று தீர்மானங்களை கொண்டுவரும் அமெரிக்க – இந்தியா – இங்கிலாந்து நாடுகளின் வணிகத்தை முடக்குவோம்.வாருங்கள்

மார்ச் 20, 2017 திங்கள், காலை 10 மணி,
ராஜரத்தினம் மைதானம், எழும்பூர்.சென்னை

அனைவரும் அவசியம் வாருங்கள்.

USA, India, UK, Srilankan Embassy/Offices SIEGE PROTEST for denying justice for Tamil Genocide

– Grace period for Srilanka will only help it to destroy genocide evidences
– Conduct Tamil Eelam Referendum & Independent International Investigation on Srilanka for Tamil Genocide since 1940 until today.

Lets wage economical embargo on USA/India/UK’s trade for their cunning resolutions to acquit Srilanka

Date: 20-Mar-2017, Monday morning 10 AM
Venue: Rajarathinam Stadium, Egmore, Chennai

இனப்படுகொலை இலங்கை அரசுக்கு காலநீடிப்பு தரக்கூடாது ஏன்?

ஐநா அவையில் கடந்த காலங்களில் வந்த தீர்மானங்கள் அனைத்தையுமே இனப்படுகொலை இலங்கை அரசு நிராகரித்துவிட்டது. இறுதியாக 2015ஆம் ஆண்டில் வந்த தீர்மானத்தின் மீதான இறுதி அறிக்கையை ஏற்கனவே தள்ளிவைத்ததை போல இந்த முறை ஐநா தள்ளி வைக்காதென்று தமிழர்கள் நினைத்த நேரத்தில் தான் நேற்று முன் தினம் அமெரிக்கா, இங்கிலாந்து, வட அயர்லாந்து, மசிடோனியா போன்ற நாடுகள் ஐநா சபையில் புதிய தீர்மானமொன்றை தாக்கல் செய்திருக்கிறார்கள்.அதில்
1.இலங்கை அரசுக்கு 2019வரை மேலும் காலநீடிப்பு கொடுப்பதென்றும்,
2.ஏற்கனவே 2015 தீர்மானத்திலிருந்த பொதுநலவாய மற்றும் ஏனைய வெளிநாட்டு நீதிபதிகள், பாதுகாப்புச் சட்டத்தரணிகள், அங்கிகாரமளிக்கப்பட்ட வழக்குத் தொடருநர்கள், புலனாய்வாளர்கள் ஆகியோர், இலங்கையின் நீதிப் பொறிமுறையில் பங்கெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகக் கூறப்பட்டிருந்ததை . இந்த புதிய வரைவு தீர்மானத்தில் ’’இலங்கை அரசின் சம்மதத்துடன்’’ என்ற ஒரு வாசகத்தை சேர்த்துள்ளார்கள். இதன் மூலம் இலங்கை அரசு சம்மதம் சொன்னால் மட்டுமே மேற்கொண்ட விசாரணையே நடைபெறும் என்று இனப்படுகொலையை முற்றிலும் மூடி மறைத்துவிட்டார்கள்.

ஏற்கனவே அமெரிக்கா இந்தியா கொடுத்த நெருக்குதலின் காரணமாக கொடுக்கப்பட்ட கால அவகாசத்தை பயன்படுத்தி தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலையின் ஆதாரத்தை பெருமளவு மூடி மறைத்தது இலங்கை. இதனை ஐநாவின் அதிகாரிகளே இலங்கைக்கு வருகைதந்து விசாரித்துவிட்டு பல்வேறு அறிக்கைகளின் வாயிலாக தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

உதாரணமாக கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 29லிருந்து மே 7ஆம் தேதி வரை இலங்கையில் ’சித்ரவதை மற்றும் ஏனைய கொடூரமான, மானிதாபிமானமற்று இழிவாக நடத்துதல் மற்றும் தண்டனைகள்’ குறித்து அறிய ஐநாவால் அனுப்பப்பட்ட Juan E. Méndez தலைமையிலான குழு கொடுத்த அறிக்கை என்பது இலங்கையில் இன்னும் யாரை வேண்டுமென்றாலும் கைது செய்யும் அதிகாரம் கொண்ட சட்டம் இருக்கிறதென்றும் அதுபோலவே போரின் போது சரணடைந்தவர்கள் இன்றும் சித்ரவதை முகாம்களில் இருக்கிறார்களென்றும் அவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்களென்றும் உண்மையை உலகுக்கு சொன்னது. அந்த முழு அறிக்கையையும் ஐநா அவை கடந்த வருடம் டிசம்பர் மாதம் 22ஆம் தேதி வெளியிட்டிருக்கிறது. https://documents-dds-ny.un.org/doc/UNDOC/GEN/G16/440/12/PDF/G1644012.pdf?OpenElement
அதுபோலவே கடந்த வருடம் அக்டோபர் மாதம் 10ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதிவரை இலங்கையில் சிறுபாண்மையினரின் உரிமைகள் எப்படி இருக்கிறது என்ற ஆராய அனுப்பட்ட குழுவின் அறிக்கையை 31 ஜனவரி 2017ல் ஐநா மனித உரிமை ஆணையம் வெளியிட்டிருக்கிறது. அதிலும் புதிய அரசு பொறுப்பேற்று இருக்கக்கூடிய இப்போதும்கூட இலங்கையில் சிறுபான்மையினர் வாழ அஞ்சுகிறார்கள் என்று அறீக்கையை கொடுத்தது. https://documents-dds-ny.un.org/doc/UNDOC/GEN/G17/021/75/PDF/G1702175.pdf?OpenElement

இதுபோக நல்லிணக்க ஆணைய குழுவின் ஆணையாளரான முன்னாள் அதிபர் சந்திரிகா குமாராதுங்காவே 18.02.2017அன்று இலங்கை இராணுவத்தினர் தமிழ் பெண்களை இன்றும் பாலியல் துன்புறுத்தல்கள் செய்கிறார்கள் என்று சொன்னார். அதுபோக சிலநாட்களுக்கு முன்னால் 13.03.2017அன்று இலங்கையின் இராணுவ வீரர்கள் நாங்கள் போற்றகுற்றம் செய்யவில்லையென்று ஒரு ஆவணத்தை வேலிக்கு ஓனான் சாட்சி என்பது போல முன்னாள் இராணுவ அமைச்சர் கோத்பய இராசபக்சேவிடம் வழங்கியிருக்கிறார்கள்.

அதுபோக மீள்கட்டுமானம் என்ற பெயரில் சிங்களவர்களை தமிழர் பகுதியில் குடியேற்றுவதும், தமிழர் நிலங்களை இராணுவ கட்டுபாட்டில் வைத்திருப்பதும் அதனை விடுக்கவேண்டுமென்று தான் கேப்பாபுலவு என்னுமிடத்தில் தமிழ் மக்கள் கடந்த 20நாட்களுக்கு மேல் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
மேலும் இந்த கூட்டத்தொடரில் ஐநா மனித உரிமை ஆணையர் சமர்பிக்கவுள்ள அறிக்கையின் முன்மாதிரி அறிக்கையை 03.03.17 அன்று செயிட் ராட் அல் ஹுஸைன் வெளியிட்டார். அந்த அறிக்கை பிப்ரவரி 10ஆம் தேதியே இலங்கை அரசுக்கு கொடுக்கப்பட்டுவிட்டது. அந்த அறிக்கையில் கலப்பு பொறிமுறை அமைக்க இலங்கை அரசின் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படவேண்டுமென்று கேட்டிருந்தார். ஆனால் அதனை தனது சுதந்திர கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய சிறிசேனா ”மனித உரிமை ஆணையரின் அறிக்கை கிடைக்கப்பெற்ற 24மணி நேரத்துக்குள்ளாக அதனை நிராகரித்து அனுப்பிவிட்டேன்” என்று பேசியிருக்கிறார். அதேபோல 03.03.17அன்று நடந்த சட்டவல்லுநனர்கள் மாநாட்டில் பேசிய இலங்கையின் பிரதமர் இரணிலும் இதே கருத்தை முன்வைத்தார். எனவே இலங்கை அரசு குறைந்தபட்ச எந்த தீர்வை நோக்கியும் ஒருநாளும் முன்னேறாது என்பதற்கு மேற்சொன்ன இலங்கை அதிபர் மற்றும் பிரதமரின் பேச்சே சாட்சி.
இப்படியாக இலங்கை அரசு ஓட்டுமொத்தமாகவே இனப்படுகொலை கறைய மூடிமறைக்கும் வேலைகளை முன்னை காட்டிலும் வேகமாக செய்துகொண்டிருக்கும் இந்த வேளையில். அமெரிக்க இந்தியா இங்கிலாந்து போன்ற நாடுகளின் அழுத்தத்தால் மீண்டும் இலங்கைக்கு கால அவகாசம் கொடுக்கும் தீர்மானம் ஐநா சபையில் தாக்கல் ஆகியிருக்கிறது. இதனை வரும் 22ஆம் தேதி ஓட்டெடுப்புக்கு விட்டு நிறைவேற்றிட அனைத்து வேலைகளையும் மேற்ச்சொன்ன நாடுகளோடு சேர்ந்து இலங்கை செய்து கொண்டிருக்கிறது.

ஒருவேளை இலங்கைக்கு இந்த கால அவகாசம் கிடைக்கும் பட்சத்தில் தமிழனப்படுகொலையை முற்றும் முழுவதுமாக நடந்த தடையமே தெரியாமல் இலங்கை அழித்துவிடும். ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொலை செய்யப்பட்டதை சர்வதேசத்தின் கன்முன்னிருந்து மறைத்துவிடும்.இதைதான் ஐநா சபை விரும்புகிறதா?எனவே எந்த நிலையிலும் இலங்கை அரசுக்கு கால நீடிப்பு கொடுக்கக் கூடாது

இனப்படுகொலை இலங்கை அரசு நாங்கள் புதிய அரசியலமைப்பு சட்டம் கொண்டுவரப்போகிறோம் அதுவே தமிழர்களுக்கு தீர்வை தருமென்கிற ரீதியில் உலகநாடுகளிடம் பேசிவருகிறது ஆனால் உண்மை நிலவரம் என்பது அந்த புதிய அரசியலமைப்பு சட்டமே ஒரு மோசடி தான். இதனை இலங்கையின் பிரதமர் இரணில் விக்ரமசிங்கேவின் பேச்சிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். அதாவது 2015ஆம் ஆண்டு இலங்கை அரசு ஓத்துக்கொண்டு பின்னர் தற்போது வரை மறுத்தவருகிற கலப்பு விசாரணை குறீத்து இரணில் பேசும் போது கலப்பு விசாரணையை ஏற்றுக்கொள்ளவேண்டுமென்றால் இலங்கையின் அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்.அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றீல் இரண்டுபங்கு மெஜாரிட்டி இருந்து பொதுவாக்கெடுப்பு நடத்தி திருத்தம் செய்யவேண்டும். அது சாத்தியமில்லை என்று அப்போது சொன்னார்.,
அப்படியானால் தற்போதைய புதிய அரசியலமைப்பு கொண்டுவருவதற்கும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் பொதுவாக்கெடுப்பு நடத்தித்தான் நிறைவேற்றமுடியும். அப்படியென்றால் இதுவும் நிறைவேற்ற முடியாது என்பது தானே பொருள். பின் ஏன் இலங்கை அரசு புதிய அரசியலமைப்பு பற்றி பேசுகிறது என்று கேட்கிறீர்களா? வெறொன்றுமில்லை இதை காட்டியே சர்வதேசத்திடமிருந்து கால அவகாசம் கேட்டு காலத்தை இழுத்தடித்து தமிழர்களுக்கு முற்றிலும் நீதியே கிடைக்காது செய்வதற்கு தான்.

எனவே காலதாமதமென்பதும் /புதிய அரசியலமைப்பு என்பதும் ஒருநாளும் தீர்வை தராது. தமிழீழ விடுதலையே தமிழர்களுக்கு ஒரே தீர்வாக அமைய முடியும்


மே பதினேழு இயக்கம்
May 17 Movement

contact.may17@gmail.com
+91 9884072010
http://may17iyakkam.com/
https://fb.com/mayseventeenmovement/
https://www.youtube.com/channel/UCxZB5WmEx5B6v2wZshDhBYQ