உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என உயர்நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.
பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (05) காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியதையடுத்து இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பின் போது இதனை சபைக்கு சபாநாயகர் அறிவித்தார்.
அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளரான சதுரங்க அபேசிங்க உள்ளிட்ட இருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதி முடிவடைந்ததையடுத்து இது தொடர்பான தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்தது.
இவ்வாறான நிலையிலேயே உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என உயர்நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.