7 இலட்சம் ரூபா பெறுமதியான செப்பு கம்பிகளை திருடிய நால்வர் கைது

100 0

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின், நிர்மாணப்பணிகளை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான, 7 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய செப்பு கம்பிகளை திருடிய குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு சம்பந்தப்பட்ட முகவரினால் நேற்று முறைப்பாடு அளிக்கப்பட்டதன் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், தெஹியோவிட்ட, பெலியத்த, தேவலேகமை, மற்றும் சீதுவ பகுதிகளை சேர்ந்த 20 முதல் 55 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், ராகமை – கல்வல பகுதியில் முச்சக்கரவண்டியை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் முச்சக்கரவண்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது