பெரும்போக உரக் கொள்வனவு தொடர்பில் விவசாய அமைச்சின் அறிவிப்பு !

116 0

காலநிலை மாற்றத்திற்கமைய பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான திட்டம் மிக விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்படுமென விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இன்று அல்லது நாளைய தினமளவில் குறித்த திட்டம் வௌியிடப்படுமென அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.அதற்காக உரிய அமைச்சுகளுடன் நேற்று(04) கலந்துரையாடப்பட்டதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.இந்த திட்டத்திற்கமைய செயற்படுமாறு விவசாயிகளிடம் கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.இதனிடையே, பெரும்போகத்தில் ஒரு ஹெக்டேயருக்கான உரத்தைக் கொள்வனவு செய்வதற்காக 20,000 ரூபாவை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது ஒரு ஹெக்டேயருக்காக வழங்கப்படும் 15,000 ரூபா நிதியை 20,000 ரூபா வரை அதிகரிக்குமாறு விவசாயிகள் இதற்கு முன்னர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கமைய, விவசாயிகள் பணம் செலுத்தி தனியார் துறையினரிடம் உரத்தை கொள்வனவு செய்ய முடியும் என விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.