செனல் 4 ஆவணக் கோரிக்கைகளை விசாரிக்க பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்க முடியும் -மனுஷ

81 0

ஐக்கிய இராச்சியத்தில் செனல் 4 வலையமைப்பினால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் ஒன்றின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் தொடர்பில் விசாரணை நடத்த பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்க முடியும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.இன்று காலை பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் நாணயக்கார, நேற்றைய வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார்.கோரிக்கைகளை விசாரிக்க சர்வதேச ஆதரவையும் கோரலாம் என்றார்.அனைத்து உரிமைகோரல்களும் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என கூறிய அமைச்சர், செனல் 4 ஆவணப்படம் வெளியிடப்பட்ட நேரத்தை கேள்விக்குள்ளாக்கினார்.ஐக்கிய நாடுகள் சபை அல்லது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வுகள் நடைபெறும் போது அல்லது சில நாட்களுக்கு முன்னர் ஆவணப்படங்கள் மற்றும் காட்சிகளை வெளியிடுவது பல்வேறு நிறுவனங்களின் நடைமுறையாக இருப்பதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.