வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணி: முக்கியஸ்தர்களுக்கு பிடியாணை

150 0

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சார்ல்ஸ் நிர்மலநாதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு யாழ்.நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி பல்கலைக்கழக மாணவர்களால் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்டமைக்காக வேலன் சுவாமிகள் மற்றும் தமிழ்த் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்களாக 7 பேருக்கு எதிராக பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இது குறித்த வழக்கு நேற்றையதினம் (04.09.2023) இடம்பெற்றது.

இந்த வழக்கில் கலந்துகொள்ளாத காரணத்தினாலே மேற்குறிப்பிடப்பட்டவர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதோடு சட்டத்தரணி கே.வி தவராசா மற்றும் சட்டத்தரணி பிருந்தா ஆகியோர் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.