எரிபொருளுக்கான கியூ.ஆர். முறைமை, கொள்கை மற்றும் விரைவான முடிவுகளை எடுப்பதற்கும் சந்தை சூழ்நிலைகளைப் பகுப்பாய்வு செய்யவும் ஒரு சிறந்த தளமாக இருந்ததாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தமது டுவிட்டர் பக்கத்தில் அவரை இதனைப் பதிவிட்டுள்ளார்.
அது மிகக் குறுகிய காலத்தில் சமூக, பொருளாதாரத் துறைகளில் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, 6.5 மில்லியன் வாகனங்கள் கியூ.ஆர். எரிபொருள் முறைக்காக பதிவு செய்துள்ளன.
அத்துடன் கடந்த முதலாம் திகதி வரையில் 350 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனை செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் வலுசக்தி அமைச்சர் பதிவிட்டுள்ளார்.