அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு கடன் திட்டம்

70 0

பெரும்போகத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்காக சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு சலுகை வட்டி வீதத்தின் கீழ் கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

செப்டம்பர் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டம் 30ஆம் திகதி வரையில் முன்னெடுக்;கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், அதிகபட்சம் தினசரி 25 மெட்ரிக் தொன் அல்லது அதற்கும் குறைவான நெல் அரைக்கும் கொள்ளளவினையும், செல்லுபடியாகும் வணிகப்பதிவினையும் கொண்ட நெல் ஆலை உரிமையாளர்களுக்கு, இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.