இணுவில் பகுதியில் காணி உரிமையாளர் வீடு கட்டுமான பணிக்காக குழி தோண்டிய போது சில வெடி பொருட்கள் தெரிய வந்தது இதனை அடுத்து உடனடியாக மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார் .
தகவல் வழங்கியதை சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலீஸார் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக வெடி பொருளை மீட்கும் குழுவினரை அழைத்து வெடிபொருளை மீட்க உள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.