இவ்விபத்து இன்றைய தினம் (03) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:
குறித்த முச்சக்கரவண்டி சாரதி வெருகல் முருகன் ஆலயத்துக்கு சவாரி சென்று, மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது பூநகர் பகுதியில் வைத்து, தூக்க கலக்கத்தில் வீதியோரம் நின்ற மரத்தின் மீது வாகனத்தை மோதியுள்ளார்.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.
உயிரிழந்த நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான தியாகராசா ஜெயச்சந்திரன் (வயது 41) என்பவர் ஆவார்.
இந்நிலையில், சடலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக கொண்டுசெல்லப்பட்டதுடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.