குளோபல் ஃபைனான்ஸ் சஞ்சிகையின் உலகின் 21 சிறந்த ‘A’ தர மத்திய வங்கி ஆளுநர்களின் பட்டியலில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவும் இடம்பெற்றுள்ளார்.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட குளோபல் ஃபைனான்ஸ் சஞ்சிகை, 1994ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் மத்திய வங்கி ஆளுநர்கள் தொடர்பான தரப்படுத்தலை வெளியிட்டு வருகிறது.
உலகின் 101 முக்கிய நாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்களை உள்ளடக்கியதாக இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்படுகிறது.
பணவீக்கக் கட்டுப்பாடு, பொருளாதார வளர்ச்சி இலக்குகள், நாணய ஸ்திரத்தன்மை மற்றும் வட்டி விகித முகாமை போன்ற பகுதிகளில் வெளிப்படுத்தப்படும் பெறுபேறுகளின் அடிப்படையில் “A” முதல் ‘கு’ வரையிலான தரங்கள் வழங்கப்படுகின்றன.
அதனடிப்படையில், A- என்ற தரத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க உள்ளடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.