அமெரிக்காவின் மேரிலான்ட் நகர செனட்டர் கிறிஸ் வன் ஹொலன் இலங்கை வருகை

91 0
அமெரிக்காவின் மேரிலான்ட் நகர செனட்டர் கிறிஸ் வன் ஹோலன் (Senator Chris Van Hollen) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இது குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது டுவிட்டரில் குறிப்பிடுகையில்,

அமெரிக்காவின் மேரிலான்ட் நகர செனட்டர் கிறிஸ் வன் ஹோலனை நான் வரவேற்று கௌரவித்தேன். இவர் இலங்கையின் மிக நீண்டகால நண்பராவார்.

இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்த கடுமையாக உழைத்தவர்.

இந்த வாரம், செனட்டர் கிறிஸ் வன் ஹோலனும் நானும் இணைந்து இலங்கையின் பொருளாதார மீட்சியை ஆராயவுள்ளோம்.

அத்துடன் மேம்பட்ட பங்காளித்துவத்திற்கான வழிகளைப் பற்றி கலந்தாலோசிப்போம், ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கான எமது கூட்டு அர்ப்பணிப்பை ஆழமாக்குவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, செனட்டர் கிறிஸ் வன் ஹோலனின் தந்தையார் 1972 முதல் 1976 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக இருந்துள்மை இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கான 75 வருடகால கூட்டாண்மையை மேலும் வலுவாக்குகின்றது.