இங்கிரியவில் தனியார் மருந்தகத்தில் பெறப்பட்ட மருந்தை உட்கொண்டவர் உயிரிழப்பு

61 0

இங்கிரிய பிரதேசத்தில் உள்ள தனியார் மருந்தகம் ஒன்றில் வழங்கப்பட்ட மருந்தை உட்கொண்ட ஒருவர் இன்று (20) உயிரிழந்துள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

இங்கிரிய, உருகல பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

கொலஸ்ட்ரோலுக்கு வைத்தியர் பரிந்துரைத்ததன் பிரகாரம், குறித்த மருந்தகத்தினால் அவருக்கு மருந்து வழங்கப்பட்டதாகவும், கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் குறித்த மருந்தை உட்கொண்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தவறான மருந்தினால் ஏற்பட்ட மரணமா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.