வறட்சியான காலநிலையினால் கால்நடைகளின் இறைச்சியை உண்பதில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வறட்சியான காலநிலை காரணமாக காட்டுப் பகுதிகளில் இருந்து உணவு மற்றும் நீர்நிலைகளைத் தேடி கால்நடைகள் வருவதால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சிலர் விஷம் கலந்த உணவுகளை கொடுத்து, விலங்குகளை வேட்டையாட தூண்டப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான இறைச்சியை உண்பதால் மனிதர்களுக்கு உயிராபத்து ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.