நீதித்துறை அதிகாரிகளின் சம்பளம் இல்லாத விடுமுறைக் கோரிக்கையை பரிசீலிப்பதில்லை என தீர்மானம்!

106 0

நீதித்துறை அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சம்பளம் இல்லாத விடுமுறையுடனான வெளிநாட்டு வேலைவாய்ப்பு விடுப்பு கோரிக்கைகளை பரிசீலிப்பதில்லை என நீதிச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

நீதித்துறையில் நிலவும் ஊழியர் பற்றாக்குறை மற்றும் சேவை தேவைகளை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வதற்காக அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு 5 வருட சம்பளமில்லாத விடுமுறையை வழங்குவதற்காக அரசாங்கம் முன்னதாக விசேட சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தது.

எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட சுற்றறிக்கையின்படி, நீதித்துறை அதிகாரிகளின் சம்பளமற்ற வெளிநாட்டு விடுமுறையை கோரும் விண்ணப்பங்களை இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை பரிசீலிப்பதில்லை என நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

நீதிச் சேவை ஆணைக்குழு இந்த தீர்மானம் தொடர்பாக அனைத்து நீதிபதிகள் மற்றும் நீதிவான்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது.