ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் பொருளாதார நீதியை உறுதி செய்வதற்காக, அனைத்துக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்து ஒரு கூட்டுக் குழுவை உருவாக்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
பொருளாதார நீதிக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் சங்கம்” என அந்தக்குழுவிற்கு பெயரிட உறுப்பினர்கள் தீர்மானம்.
ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதில் இணையவுள்ளதாக எதிர்பார்க்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குழு தொடர்பாக எதிர்வரும் வாரத்தில் அறிவிக்கவுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.