2022, 2023 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி சட்டத்தரணிகளைத் தெரிவுசெய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இலங்கை அரசியலமைப்பின் 33 ஈ சரத்துக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
அந்த வகையில் பின்வரும் தகமைகளைக் கொண்டுள்ள இலங்கை பிரஜைகள் ஜனாதிபதி சட்டத்தரணிக்காக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை உயர் நீதிமன்றத்தின் சிரேஷ்ட சட்டத்தரணியாக இருத்தல்.
சட்டத்துறையில் சிறந்த வரவேற்பு மற்றும் தொழில்துறை திறன்களை வெளிக்காட்டியிருத்தல்.
இலங்கை சட்டத்தின் முன்னேற்றத்திற்கும் சட்டத்துறையில் நிபுணராகவும் தனித்துவமான மற்றும் சிறந்த பங்களிப்பை வழங்கியிருத்தல்.
இலங்கைக்குள் அல்லது வெளிநாட்டில் சட்டம் தொடர்பான சிறப்புத் திறனை வெளிப்படுத்தியிருத்தல்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பை மீறாமல் நற்பண்பும் நற்பெயரும் கொண்டவராக இருத்தல்.
சட்டத்தின் ஆட்சி அல்லது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் அல்லது மட்டுப்படுத்துவதற்கான எந்தவொரு செயலிலும் ஈடுபடாமல் இருத்தல்.
உயர் நீதிமன்றத்தினாலோ அல்லது இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினாலோ ஒழுக்காற்று உத்தரவுக்கு உட்படுத்தப்படாத ஒரு நபராக இருப்பதுடன், நீதிமன்றத்தினால் தொழில்சார் முறைகேடுகள் அல்லது தவறான நடத்தைகளுக்காக தண்டிக்கப்படாதவராக இருத்தல்.
குறைந்தபட்சம் ஐந்து வருட காலத்திற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் வருமான வரி செலுத்துபவராக பதிவு செய்துகொண்டிருத்தல் என தகைமைகள் விபரிக்கப்பட்டுள்ளன.