உயர்கல்வி அமைச்சின் அனுமதியின்றி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாது என பல்கலைக்கழக பேராசியர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு ரகசியமாக வெளிநாடுகளுக்கு பேராசிரியர்கள் யாராவது சென்றிருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என சம்மேளனத்தின் பேச்சாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்ஹ தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடத்திற்குள் 26 வீதமான பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.