அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி

64 0

நாட்டில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதியானது இன்று (15) வீழ்ச்சி அடைந்துள்ளது.

மக்கள் வங்கி : நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 311.42 ரூபாவிலிருந்து 312.88 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 326.74 ரூபாவிலிருந்து 328.27 ரூபாவாக உயர்ந்துள்ளது.

கொமர்ஷல் வங்கி : நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 309.78 ரூபாவிலிருந்து 311.74 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 325 ரூபாவிலிருந்து 326 ரூபாவாக உயர்ந்துள்ளது.

சம்பத் வங்கி : எனினும் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 315 ரூபாவாகவும், 327 ரூபாவாகவும் காணப்படுகிறது.