ராகம ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் நேற்று (15) அவர் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரயில் கடவை மூடப்பட்டிருந்த நிலையில், துவிச்சக்கரவண்டியை தள்ளிக்கொண்டு கடவையை கடக்க முற்பட்ட போதே விபத்து ஏற்பட்டுள்ளது.
இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
உயிரிழந்தவர் 35 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர் என்றும் வெளிர் மஞ்சள் நிற சட்டை மற்றும் கட்டை காற்சட்டை அணிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சடலம் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.