பிரிட்டனில் புதிய பிரதமராக தெரசா மே பதவியேற்ற பின் அவரது அமைச்சரவையில் மேலும் ஒரு இந்தியர் அமைச்சராக பொறுப்பேற்று உள்ளார். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறிய பின், கேமரூன் பிரதமர் பத வியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து தெரசா மே பிரதமராக பதவியேற்றார். இவரது அமைச்சரவையில் பிரீத்தி படேல் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவர் குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக உடையவர்.தற்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அலோக் சர்மா அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். பிரீத்தி, அலோக் இருவரும் முந்தைய கேமரூன் அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தனர்