பொலன்னறுவையில் வறட்சியால் 50 ஆயிரம் கறவை மாடுகள் பாதிப்பு

124 0
கடும் வறட்சியான காலநிலை காரணமாக பொலன்னறுவை மற்றும் மகாவலி B வலயத்தில் மேய்ச்சலுக்கு புற்கள் கிடைக்காமையால் சுமார் 50 ஆயிரம் கறவை மாடுகள்  பாதிக்கப்பட்டுள்ளன.

குறித்த பிரதேசத்தில்  கடந்த எட்டு மாதங்களாக மழை இன்மையால் கறவை மாடுகளுக்கான  மேய்ச்சல் தரைகளில் உள்ள புற்கள் அழிந்து போயுள்ளன.

வெலிகந்த, திம்புலாகல, தம்மின்ன, சிங்கபுர, எல்லேவெவ, அசேலபுர,விஜேபாபுர மற்றும் மகாவலி B வலயத்திற்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள 50 க்கும் மேற்பட்ட பால் பண்ணையாளர்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர் .

இதேவேளை, வறட்சி மற்றும் கறவை மாடுகளுக்கான புற்கள் கிடைக்காமையின் காரணமாக நாளாந்தம் கிடைக்கும் பாலின் லீற்றரின் அளவும் 50 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளதாக பால் பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.