முள்ளியவளையில் பொதுசந்தையில் விசமிகள் அட்டகாசம் ; வியாபாரிகள் பாதிப்பு

135 0
image
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஆழுகையின் கீழுள்ள முள்ளியவளை பொது சந்தையில் நேற்று வியாழக்கிழமை (10) இரவு அடையாளம் தெரியாத விசமிகள் சிலர் புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் வியாபாரிகளின் மரக்கறிகள் உள்ளிட்ட சந்தை கட்டங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இரவு காவலாளி சந்தையின் முன் கதவினை பூட்டிய நிலையில் வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று சந்தையின் கதவினை உடைத்து உள்ளே புகுந்து சந்தைக்குள் இருந்து மது அருந்தபோவதாக காவலாளியுடன் முரண்பட்ட நிலையில் கையில் மதுபான போத்தல்களுடன் வந்த நபர்கள் சந்தை கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

இதனால் இன்று வெள்ளிக்கிழமை (11) காலை சந்தையினை பூட்டி பொலிஸார் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளார்கள். காலை 10 மணிவரை பொலிஸார் வந்து விசாரணை செய்யும் வரை சந்தை நடவடிக்கைகள் இடம்பெறவில்லை.

சம்பவ இடத்திற்கு முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் வருகை தந்துள்ளதுடன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் செயலாளார் க.சண்முகநாதன் உள்ளிட்ட சபையின் உத்தியோகத்தர்கள் வந்து பார்வையிட்டு முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளார்கள்.