ஊழியர் சேமலாப நிதியத்தின் நிதியை திறைசேரி உண்டியல் மற்றும் பிணை முறி பத்திரங்களில் முதலீடு செய்யும் போது வழங்கப்படும் வட்டியை 9 சதவீதமாக குறைக்க அரசு முடிவு செய்ததன் மூலம் உறுப்பினர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக அரசு தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விஜித் மலல்கொட, காமினி அமரசேகர மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை வழங்கப்பட்டுள்ளது.
ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினரும் நிதி ஆய்வாளருமான சதுரங்க அபேசிங்கவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.