கொழும்பு மக்களின் பிரச்சினையை ஆராய ரோசி தலைமையில் ஜனாதிபதி பணிக்குழு

89 0

கொழும்பு – 1 முதல் கொழும்பு – 15 வரையான பகுதிகளில் வசிக்கும் மக்களின் பிரச்சினைகளை ஆராய முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க தலைமையில் ஜனாதிபதி பணிக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க தலைமையில் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்கள் 10 பேர் அடங்கியோரே இந்த ஜனாதிபதி பணிக்குழுவில் உள்ளடங்கியுள்ளனர்.

இந்த நிகழ்வு ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று 10ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றது.

கொழும்பில் வசிக்கும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இந்த ஜனாதிபதி பணிக்குழுவினர் ஆராய்ந்து, அவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுப்பர் என்பது முக்கிய விடயமாகிறது.

மக்களின் பிரச்சினைகளுக்குரிய தீர்வுகள் மிகவும் மந்தகதியில் இடம்பெறுவதால் மக்களின் பிரச்சினைகளை அடையாளப்படுத்தும் உயரிய திணைக்களங்கள், அலுவலகங்களின் அதிகாரிகளை சந்தித்து பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நேக்கில் இந்த பணிக்குழு செயற்படும்.

குறிப்பாக மின்சாரம், நீர், வடிகான், வீதி உள்ளிட்டவை தொடர்பான பிரச்சினைகளோடு சேரிகளில் வாழும் மக்களுக்கும் இதன் மூலம் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்.

மேலும், இந்த பணிக்குழுவில் கொழும்பு வடக்குக்கு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் லயன் மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.