அங்கொடையில் நோயாளர் கொலை, நால்வருக்கு விளக்கமறியல்!

77 0

அங்கொடை தேசிய மனநல வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று வந்த நோயாளர் ஒருவரை தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைதான நான்கு பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் கொழும்பு மேலதிக நீதிவான் தரங்கா மஹவத்தை முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அவர்களை எதிர்வரும் 24ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சந்தேக நபர்கள் இருப்பார்களாயின் அவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.