அடுத்த சில மாதங்களில் அரசாங்க வைத்தியசாலைகளில் CT scan, MRI மற்றும் PET scan பரிசோதனை சேவைகள் நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள கதிர்வீச்சு தொழில்நுட்ப நிபுணர்களின் பற்றாக்குறை காரணமாக இந்த சேவைகளை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.
இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு தெரியப்படுத்திய போதிலும் இதுவரை புதிய அதிகாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவில்லை என சானக தர்மவிக்ரம சுட்டிக்காட்டியுள்ளார்.