இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஊழியர் ஒருவர் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிநீர் இணைப்பை வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்காக கூறி ஒருவரிடம் பணம் பெறப்பட்டபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குறித்த ஊழியர் 5,000 ரூபாவை கோரியதாகவும், அந்த தொகையில் 1,000 ரூபாவை இவர் பெற்றபோதே இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.