கெஹலியவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

88 0

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் விவாதிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக, கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அதற்கான திகதியினை சபாநாயகரே வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை இந்த வாரத்தில் விவாதிப்பதற்கு அனுமதி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும் பெருந்தோட்டத்துறை தொடர்பான விவாதம் இடம்பெறுவதால், அதற்கே பிரதான முக்கியத்துவத்தை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

எனவே, நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதத்தை இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் விவாதிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக, அதன் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட மருந்து தட்டுப்பாடு மற்றும் சர்ச்சைக்குரிய மயக்க மருந்து உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்காக ஐக்கிய மக்கள் சக்தி, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்துள்ளது.