இந்த மாதத்தின் முதல் 6 நாட்களில் சுமார் 30 ஆயிரத்து 303 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வாரந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்தியாவில் இருந்து நான்காயிரத்து 608 பேரும் அமெரிக்காவில் இருந்து 4 ஆயிரத்து 254 சுற்றுலாப்பயணிகளும் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளனர்.
அத்துடன், சீனாவில் இருந்து 2 ஆயிரத்து 246 பேரும், பிரான்ஸில் இருந்து ஆயிரத்து 842 பேரும் ஜேர்மனியில் இருந்து ஆயிரத்து 791 பேரும் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.