ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைக்கு உரிமக் கட்டணம்!

82 0

ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை கிலோ கிராம் ஒன்றுக்கு மூன்று ரூபாவை உரிமக் கட்டணமாக அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தேயிலை ஆணையாளர் சுங்க ஏற்றுமதி பிரகடனத்தை அங்கீகரிக்கும் வேளையில் இந்த உரிமக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என இலங்கை தேயிலை சபை சுட்டிக்காட்டியுள்ளது.

2023 ஆம் ஆண்டு தேயிலை ஏற்றுமதி வரி மற்றும் கட்டுப்பாட்டு ஆணையாக இந்த உரிமக் கட்டணம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு தேயிலை ஏற்றுமதியாளரும் அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

ஏற்றுமதி உத்தரவை நிறைவேற்ற முடியாத பட்சத்தில், ஏற்றுமதியாளர் ஒருவருக்கு இந்த உரிமக் கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என இலங்கை தேயிலை சபை சுட்டிக்காட்டியுள்ளது.

தேயிலை ஏற்றுமதியில் வசூலிக்கப்படும் இந்த உரிமக் கட்டணம் தேயிலை சபை சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட மூலதன நிதியில் வரவு வைக்கப்பட வேண்டும்.​