பிரதான மார்க்கத்தில் பயணிக்கும் ரயில் பயணிகளுக்கான அறிவிப்பு

90 0

இன்று (09) காலை இடம்பெற்ற ரயில் விபத்தினால் பிரதான மார்க்கத்தில் இயங்கும் ரயில் சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது இரட்டைப் பாதையின் ஒரு பாதை மாத்திரம் ரயில் சேவைக்காக திறக்கப்பட்டுள்ளது.

விபத்தையடுத்து இயக்கப்படவிருந்த 12 ரயில்கள்  தரித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை ஒவ்வொன்றாக ஒற்றைப் பாதையில் இயக்கப்படும்  ரயில்வே பிரதி பொது முகாமையாளர்  இந்திபோலகே குறிப்பிட்டார்.

எனினும், ரயில்கள் தாமதமாக வரலாம் என பிரதிப் பொது முகாமையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விபத்து காரணமாக பஸ்யால சந்தியில் இருந்து மீரிகம மற்றும் நெடுஞ்சாலை நுழைவாயில் நோக்கிய போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மீரிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வில்வத்த ரயில் கடவையில் இன்று காலை பொல்கஹவெலயிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் கொள்கலன் லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

கொள்கலன் லொறி ரயில் கடவைக்குள் நுழைந்த போது, ​​கொள்கலன் லொறியின் இயந்திரம் திடீரென நின்றதால்  இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது கொள்கலனின் சாரதி வாகனத்தை விட்டுச் வௌியேறியுள்ளதாகவும், காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து சம்பவம் கையடக்க தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.