யால மற்றும் உடவலவை தேசிய பூங்காக்களை வரட்சி காரணமாக தற்காலிகமாக மூடுவது தொடர்பில் இன்று தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
விலங்குகளுக்கான தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறையை கருத்திற் கொண்டு பூங்காக்களை மூட வனவிலங்கு அதிகாரிகள் ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளனர்.
பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு தண்ணீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும், அந்த நடவடிக்கையின் நடைமுறைத்தன்மை குறித்து ஆராயப்படவுள்ளது.
வனவிலங்கு மற்றும் வன வள பாதுகாப்பு அமைச்சின் படி, தேசிய பூங்காக்களை மூடுவது குறித்து முடிவெடுப்பதற்கு முன், வானிலை ஆய்வுத் துறையுடனும் கலந்தாலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.