வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலை நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைதிகளுக்கு பரவும் தொற்று நோய் காரணமாக இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் சிறைச்சாலை திறக்கப்படுவதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பிராந்திய தொற்றுநோய் நிபுணரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகளை தற்காலிகமாக மூடுவது தட்டம்மை நோய் பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.
சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில், ஜூலை 25 முதல் சிறைச்சாலைக்குள் பார்வையாளர்கள் வருவது தடை செய்யப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, இன்றுடன் கட்டுப்பாடுகள் முடிவடைந்து, நாளைய தினம் (08.08.2023) சிறைச்சாலை மீண்டும் திறக்கப்படவுள்ளது.தற்போது வவுனியா சிறைச்சாலையில் 400 கைதிகளும் 85 பணியாளர்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.