பொரளை லெஸ்லி ரணகல மாவத்தையில் வர்த்தகர் ஒருவரைச் சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் மூவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.
மூவரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த வருடம் மே மாதம் 20 ஆம் திகதி இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் வத்தளை ஹேகித்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.